முந்தானைப் பாசத்தால் என் முகம் துடைத்தவளே! மார்பில் சுமந்து என்னை உறங்கவைத்தவளே!! அடுப்படி புகையிலும் என்னை அழகாய் வளர்த்தவளே!! கால்வயிற்றுக் கஞ்சியிலும் என்னைக் கலக்காமல் காத்தவளே!! ஊண் உறங்க்கமின்றி என் உடல் வளர்த்தவளே! என்னை வளர்க்க நீ அல்லவா மெலிந்து கிடந்தாய்!! உன் பசி மறந்தல்லவா என் பசி தீர்த்தாய்!! பள்ளிப் பருவம் படர்ந்தது, வாலிபச் சிறகு முளைத்தது, வயதோ ஒரு வரம்பை எட்டியது! பருவம் அடைந்து பாதை மாறி தாய்ச் சொல்லைத் தட்டி எவளுக்கோ தாலிக் கட்டி, தாய்ப் பாசத்தை மறந்தேன்! தாரத்தோடு வானில் பறந்தேன் !! இன்றோ நான் ரேமண்டில் ஆடை எடுக்கிறேன்!! நீயோ ரேசன் சேலை கூட இல்லாமல் வாசல் ஓரம் கிடக்கிறாய்!! என் மனைவிக்கோ போத்திஸுல் புடவை] எடுக்கிறேன்! நீயோ போர்த்திக்ககூட துணியில்லாமல் ஒரு தூணோரம் கிடைக்கிறாய்!! இருந்தாலும் எதற்கு, பாசத்திற்குக் கொள்ளிவைத்தாற்போல் ஒரு நாள் இந்தப் பாவிக்கும் கொள்ளிவைக்கமாட்டானா என்றுதானே??............