கவிதைக் மேகங்கள்

1).உன்

மேல் இமையும்

கீழ்    இமையும்

முத்தமிட்டுப்   பிரிய

விழியசைத்து

ஓரக்கண்ணிலிருந்து

உன்

பார்வை   சுமந்த  அம்பு

என் மீது பாய்ந்தது

என்

நெடுநாள்  ஆசை

தயவு   செய்து  பேசிவிடு

பெண்ணே

உன்

வாய்மொழியின்   வர்ணனை

மரணமாக   இருந்தாலும்

நான்

மனப்பூர்வமாக

ஏற்றுக்கொள்கிறேன்..........



2).வேடந்தாங்கல்    பறவையாய்

வண்ண  வண்ண    உடையில்

வலம்    வருகின்ற

குடகுமலையின்

அழகு   வற்றாத    சுணையே!

உன் அழகிற்கு

இலக்கணம்    எழுத

தோன்ற வேண்டுமடி

மீண்டும்  ஒரு

தொல்காப்பியர்......... 


3).இந்த    ஏழையின்   வரிகளை

அலங்கரிக்க      வந்த   அமுதசுரபியே

கிழிந்துபோன      என்  காகிதங்கள்

அழகின் பிரமிப்பால்

பசைபோட்டு   ஓட்டவந்த   பதுமையே!

இந்தக்    காகிதங்களுக்கு

ஒவ்வொரு   நாளும்

புன்னகை   வரிகளை

புதிப்பித்துத்   தந்த    புதுமையே

உன்    அழகின்     மீது

என்   கற்பனை கொண்ட காதலும் ,

உன்   புன்னகையின் 

என்    எழுதுகோல்   கொண்ட   காதலும்,

என் கவிதைகளின்

பிண்ணிப்     பிணைந்துவிட்டது ,

உன்    அழகினை மிஞசிவிட்டன

உன்னை  வர்ணித்த

என்   கவிதை  வரிகள்.........


4).அன்பே

உன்  அழகில்   வியந்த  நான்

உன்னையே

தொடர்ந்துகொண்டிருந்தேன்  ,

ஒரு     நாள்

கோடைக்கானல்      மேகமாய்

கொஞ்சி  விளையாடிக்கொண்டிருந்தாய்

உன் தோழிகளுடன்  ,

உன் அழகை

இரசித்துக்     கொண்டிருத்த   நான்

சட்டென்று      பெய்த

உன் புன்னகை   மழையில்

நனைத்து விட்டேன்  ,

எங்கே

உன் புடவை    முந்தானையில்

ஒரு முறை

தலை    துவட்டி  விடு .....


5).அன்று

நம்    கல்லூரியின்

கடைசி நாள்   விழா ,

நீயோ   புடவை

கட்டியிருந்தாய்   ,

நானோ

ஐ.எஸ்    திவிரவாதயாய்

பதுங்கி  இருந்து    வந்தேன்

உன்னைப்     பார்ப்பத்ற்கு  ,

என்னைக்     கண்டவுடனோ

நீ

சினுங்களைச்    சிந்திக்கொண்டே

வெட்கப்பட்டு   ஒளிந்தாய்

உன்  தோழிகளுக்குப்பின்னால்  ,

சித்த   பிரம்மையால்

சிலிர்த்துப்போன   நானோ

உன்னிடத்தில்    மொழிந்தேன்

    "   நீ   அழகின்

       சிலையாக    இருத்தாலும்
   
      புடைவையில்

    கலையாக     இருக்கின்றாய்   என்று ......... "




6).காதல் அழகானது

அதனால்    காதலியும்

அழகாகிவிடுகிறது ,

நீயோ

பிறப்பிலே   அழகானவள்

இருந்தாலும்

என்   காதல்    உளியால்

மேலும்   செதுக்கப்படுகிறது

பேரழகியாக !

உன்னால்

உன்னைச்    செதுக்கிய

உளியும்    அழகாகிவிட்டது ,

உன்னை வர்ணித்த

என்   கவிதைகளும்   அழகாகிவிட்டன!!!......



7).பெண்ணே

உன்  அழகினை

என்    கவிதை வரிகளுக்குள்

அடக்கிய   முடியாது  ,

கட்டுக்கடங்காத

உன் அழகினை

கடல்    அளவு

கவிதை எழுதினாலும்

கட்டுப்படுத்த     முடியவில்லை  ,

கடல் நீர்   போன்ற

உன் அழகில்

கற்பனைப்     படகில்

கவிதைப்    பயணம்

செய்துக்கொண்திருக்கின்றேன் ,

ஆனாலும்

அவ்வப்போது

உன்   புன்னகை   அலையிலும்

வேட்க    மழையிலும்

நனைந்து    விடுகின்றேன்  ,

ஆங்காங்கே

அழகிய   தீவுகளைக்

கடந்து   சென்றாலும்   ,

அடியே

உன்  அழகிற்கு

இணையில்லையே!.....



8).ஒரு  நாள்

சட்டென்று      தடுக்கி   விழுந்தேன்

ஒரு    ஆழமில்லாத      குழியில் ,

எட்டிப்பார்த்தப்   பின்புதான்     தெரிந்தது

அது

உன் கன்னக்குழி   என்று ......


9).ஒரு  வகையில்

நானும்

நீ சுவாசிக்கும்   காற்றும்

ஒன்று தான்,

காற்று   உன் சுவாசத்தால்

தன்னை  அலங்கரிக்கிறாய்,

நான் உன் அழகினால்

என் கவிதைகளை

அலங்கரிக்கிறேன்........


10).அழகுக்கு  உயிர்த்தந்த

ஓவியமே!

தங்கத்   தோல்களால்    வேய்ந்த

உன்    பாதத்தைக்

கட்டித்    தழுவ

எத்தனை    ஆண்டுகள்

தவம்   இருந்தனவோ

உன்   காலணிகள்..........


11).சின்னக்   சின்னக்

கற்பனைகளைக்

கவிதை  மணிகளாய்க்    கோர்ர்ந்து

கொண்டுவந்துள்ளேன்   உன்னிடத்தில்

எங்கே!

உன் கால்கொலுசாக

ஏற்றுக்கொள்

என் கவிதை   மணிகளை......



12).தாளம்பஊவாய்த்

தவழ்ந்து  வரும்    உன்னைச்,

சங்கம்   வைத்து

அழைத்தன,

நீ   தினமும்

விரல்களால்    விடுதலை  செய்யும்

உ ன்   வீட்டுத்  தோட்டத்துப்

பூக்கள்......



13).பனிக்கட்டி   போன்ற

என்      இதயத்தில்

பற்றி    எரியும்

நெருப்பான

உன்    நினைவுகளினால் ,

நித்தம்    உருகுவது

பனித்துளி      மட்டுமல்ல

என்    உயிர்த்துளியும்     தான் ......




14).ஏனோ   தெரியவில்லை ,

உன்  அழகு

தொடுத்த    அம்பு

என்மீது

சற்று    ஆழமாகவே

பாய்ந்துவிட்டது ,

அதை

நீ    எனக்கு அளித்த

காதல்ப்     பரிசாக  ஏற்றுக்கொண்டு ,

என்     மரணத்தால்

உன்னை   வரவேற்கின்றேன்.....



                       
                               15. வானிலை  அறிக்கை

உன் அழகின்    மிதான

என்  ஆராய்ச்சியை

வானிலை அறிக்கையாய்

வாசித்து    விடுகிறேன்  ,

பூமிக்கு    வந்துவிட்டால்   தேவதை  !

இனி    சொர்கத்தைப்   பொறுத்தவரை

இருள்     சூழ்ந்திருக்கும்  ,

பூமியைப்    பொறுத்தவரை

அவள் அழகு  சூழ்ந்திருக்கும் ,

அவ்வபோது    சற்று  லேசான

புன்னகை   மழையும் ,

ஒரு     சில   இடங்களில்

கன்னகுழியுடன்    கூடிய

கனமழையும்    பெய்யக்கூடும் .......



                 16).காதல்    நிலையம்

என் கவிதைகள் எல்லாம்

உன்

அழகு  என்ற    பேருந்தை

ஓட்டிச்    செல்கின்றான்  ,

அதில்   நான்

பயணச்     சீட்டில்லாமல்

பயணம்    செய்துகொண்டிருக்கிறேன்

எங்கே

உன்     சம்மதத்தால்

காதல்    நிலையத்திற்கு

ஒரு    டிக்கெட்        எடு........

     

         17).   தவறி    விழுந்த     பார்வை


என்  கவிதைகளுக்காகப்

பிறந்தவளே!!

என்னைக்     கவிஞனாக்கப்

பிறந்தவளே!!

உன்  அழகின்   அழத்தை

சற்று

எட்டிப்பார்க்க    நினைத்து

என்   பார்வை    தவறி

பள்ளத்தில்    விழுந்துவிட்டது  ,

பிறகு   என் கற்பனையை

அனுப்பிக்

கண்டுபிடிக்கச்   சொல்லியிருந்தேன் ,

ஆனால்

உன் அழகில்  விழுந்த

இரண்டையுமே

இதுவரை      காணவில்லை.......



18).கவிதை   எழுத

பேனாவை    எடுத்தாலே

என்   விரல்கள்

உன்  அழகைத்தான்

எழுதுகிறது  ,

ஏன்   என்று    கேட்டால்

உன்  உதட்டோரம்

ஒட்டியிருந்த

ஐஸ்கிரீமை     துடைத்தது   முதல்

என்கிறது............



                       19).முதல்   உயிர்

எத்தனை  கோடி

ஆண்டுகளுக்கு    முன்பு

முதலில்  மனிதன்  தோன்றியது

குமரிக்     கண்டமாய்  இருந்தாலும்

அழகு    என்ற   சொல்லும்

அழகி   என்ற   ஒருத்தியும்

உன்      பிறப்பிற்குப்    பின்புதான்

தோன்றியிருக்கா    முடியும்  ,

ஏன்   தெரியுமா ?

இந்த    பூமியில்

அழகோடு   பிறந்த

முதல்   உயிர்  நீதானே!!!........ 


20).திசை    தெரிமா   காடு ,

தேக்கு    வீடு,

மூங்கில்   காட்டு    முனகல்  ,

நீர்ச்சுனையின்     அருகில்

வாழை ததோப்பு    வாசல்  ,

உன்   ஆடை   துவைக்க

ஒரு  அருவி

நீ வளர்க்க     மட்டும்

ஒரு  முயல்   குட்டி  !

உன்னிடத்தில்

படிக்கவரும்    பறவைகள்!

என்னோடு   குளிக்கவரும்

குருவிகள் !!...




21).வீட்டின்

இடதுபுற    ஆறு  ,

மீன்பிடிக்க

உன்    துப்பட்டா!

தலைதுவட்ட

உன்     தாவணி ,

மான்க்குட்டியுடன்

மாலை !

காடா    விளக்கு !

உன்  கண்களின்

வெளிச்சம்  !

என்  கற்பனையின்   பசி

உன்   வேட்கத்தின்

விருந்து!

பறவைகளின்   தாழாட்டை

நிலவொளியில்      நாம்    கேட்க !

விடியும்முன்

களைந்து   விட்டது

என்  கனவு...........




                 22).உன் புன்னகை   நாடு


நான்  பார்வையைத்

தோட்டவாய்   ஏந்திய

கண்கள்   எனும்

துப்பாக்கியால்,

எனைக்     கண்டபடி

சுடுகின்றாயே!

என்    மரணம்    தான்

உன்  புன்னகை    நாட்டுச்

சுதந்திரமோ!.....


                         23).அழகுச்   சிறை


உன்   அழகுச்   சிறையில்

ஆயுள்  தண்டனைக்     கைதியாய்

அடிமைப்பட்டிக்    கிடக்கின்றேனே!

உன்   இதழ்      அசைத்து

என்    இதயநாட்டுக்குச்

சுதந்திரம்     தரக்கூடாதா!...........


                        24).புன்னகை மொட்டு

உன்  புன்னகை ,

என்    பேனாமுல்

அடிக்கடி    வர்ணித்த   வார்த்தை  ,

உன்

மேல்  உதடும்

கீழ்    உதடும்

என்  கற்பனையின்

இரு    கரங்கள்  ,

வறண்டுபோன    உன்  உதட்டின்

வரிப்பள்ளங்களுக்கிடையில்

உன்    புன்னகை

ஓடி    ஒளிந்துகொள்கிறது,

உனக்குத்    தாகம்   வரும்   வரை

நான்

தண்னணிர்ப்போல்  காத்திருப்பேன்

உன்  இதழ்நனைக்க.....




25).என் அகராதியில்

அதிக   இடம்பிடித்த

உன்  அழகினை

காற்றில்   எழுதி

காகிதங்களாய்ப்

பறக்கிவிடுகின்றேன்,

ஒருநாள்

      இந்த   உலகமே

உன்  அழகைக்    காண

ஆவல்   கொண்டிருக்கும்

அன்று  நிலவாய்த்    தோன்றி

இரவைப்    பகலாக்கிடு

உன்   அழகின்

வெளிச்சத்தில்.......



26).காதல்   மரத்தின்

இலைகளாய்    நான்

ஒவ்வொருநாளும்

உன் நினைகளுடன்

உதிர்ந்துகொண்டிருக்கிறேன்

நீ

மழைபோல்    வந்து

என்னை  மலர்விப்பாயா?

இல்லை

புயல்   போல்  வந்து

என்னை   புரட்டிப்போடுவாயா?



27).கார்மேகத்து      காவியமே!

அழகுக்கு   இணையில்லா    ஓவியமே!

உன்    முகம்    காண

முடி    ஒதுக்கி

தென்றலே    தேடிவந்த    தேவதையே!

என்  பார்வை    தேடலின்

பசி   தீர்த்த   திரவியமே!

கன்னக்குழியில்

என்னைக்   கவிழ்த்த

கலைநயமே!

அழகால்   எனை    ஆட்சிசெய்யும்

அரபுநாட்டு    அதிசயமே!

உன்

அடங்கா     அழகுக்கு

கவிதைவேலி    போட

காத்துள்ளேன்

என்  காகிதங்களுடன் .........



28).இலையாய்

உன்    மடியில்

தலைசாய்த்திருந்த பொழுதுதான்

புச்செடியில்

புன்னகை  புத்ததைக்   கண்டேன் ,

பூவாய்     மலர்ந்த

உன் புன்னகையைக்    கண்டவுடன்

என்  விரல்கள்   வண்டுகளாகி

தேனெடுக்க வந்தபொழுது

வேட்கப்பட்டுத்    தலைசாய்ந்த    பூவே,

வியர்வையாய்    வழியும்

உன்     வெட்கம்தான்

வண்டு   எடுக்கவந்த   தேனோ!.....


29).உன் கண்களின்

காந்த   விசையால்

நான்    கடத்தப்பட்டு  ,

உன்

அழகுத்    தீவில்

சிறைவைக்கப்பட்டேன்

அகதியாய்!

தயவு     செய்து

என்னை

விடுதலை      மட்டும்    செய்துவிடாதே!

கண்ணழகுக்    காவியமே !

இதழலகு   ஓவியமே !

அழகுத்தீவு    அற்புதமே!

எங்கே !

உன்

புன்னகை மொட்டுச்

சட்டத்தின்படி

எனக்கு  ஆயுள்  தண்டனை

கொடுத்துவிடு!!!.....


30).கண்  சிமிட்டும்    சிற்பமே !

அழகில்   மிதக்கும்   தெப்பமே!

நீண்ட நாள்   தவமிருத்த

என்  கற்பனையின்  தேடலே!

என் வர்ணனையின்

வாசிப்புக்கு     வாத்தியமே !

அடிக்கடி     இடம்பெயரும்

இயற்கைக்   கூத்தே!

பாலைவனத்தைக்   கூட

சோலைவனமாக்கும்    சொற்பனமே!

என்  சுவாசத்தை  நிறுத்தப்போகும்

தொலைதூரக்    காற்றே!

உன்னைக்    காணக்

காத்திருக்கும்   என் கண்களில்

உன்    பார்வை அம்பை

செலுத்தி  விடாதே!

அதிலும்    உன்  அழகுதான்

வழியும்!.....



31).அழகால்

என்னை அறிமுகப்படுத்தியளே!

என்   கற்பனையின்   பிறப்பிடமே!

என்  வர்ணனை     வீட்டின்

வாயிற்கதவே!

என்   சிந்தை  எல்லாம்

கூடுகட்டி  வாழும்

குயிலோவியமே!

என்    காகித  வாசலில்

தினமொரு     கோலமிடும்

அழகின் விடியலே!

அன்று   காதலை   விதைத்தேன்

பருவத்தின்    தோட்டத்தில் !

இன்று

அதில்   உன்

அழகை  விதைத்தேன்

 கவிதைக்      விளைவித்தேன்

கவிதைக்    கூட்டத்தில்!

அறுவடை    செய்ய

என்றும்     காத்திருப்பேன்

உன்    அனுமதிக்காக !.........


32).என்  இனியவளே !

உன்    நினைவுகள்

வரும்பொழுதெல்லாம்

என்னிடத்தில்

கவிதைமழை    பொழிகிறதே!

உன்    அழகினால்

என்  கற்பனை   மேகத்தை

கைதுசெய்துவிட்டாயோ?

ஆயிலும்

அது    கரைந்தாலும்   கூட

மழையாய்ப்   பொழிவது

உன்    அழகைத்தான்!

கலைந்தாலும்   கூட

நிழலாய்     இருப்பது

             உன்   அழகுக்குத்தான்.............




             33).  புன்னகைக்    மலரே

புரியா   மொழி    பேசி

இமைகள்    எனும்    துடுப்பசைத்து

ஓரக்கண்களால்

என்   உயிர்    பறித்து

புன்னகை   மலராய்

மலர்ந்துவிட்டாய் ,

அறியாப்    பருவத்தில்

தெரியாத்     திசைநோக்கி

நீ    சொல்லும்

இடமெல்லாம்     சென்று ,

என்  இதயக்      கூட்டிற்கு

உன்னில்    தேனெடுக்க    வந்த

என்    பார்வை வண்டுகளுக்கு

மலர்ந்திருந்த    மறுவாழ்வு    கொடு  ,

உன்   தந்தையிடம்   சொல்லி

மருந்து    அடித்துவிடாதே !.......




34).உ ன் அழகின்    ஆர்ப்பரிப்பால்

புன்னகை   அலைகளைக்    கொண்டு

என் இதய   இடத்தை

உரசிவிட்டாய்!

என்    பார்வைப்    படகினை

உன் இதயத்திவினைக்    காண

இடைவிடாது    இயக்கினேன் ,

ஆனால்    நீயோ

இராட்சத  அலைககளாகி

என்  பார்வைப்      படகில்

நீர்    நிறைய   வைத்துவிட்டாய்!.....


       35). அழகின்    அடையாளமாய்


உந்தன்  ஒட்டுமொத்த   அழகையும்

ஒன்று திரட்டி

உன்னில்    உதிக்கும்

புன்னகை   உள்ளதே!

என்    உயிரை

உன்  அழகில் நனைத்து

பிளிந்து   விடுகின்றது,

புன்னகை   ஊற்றே!

இதழசைக்கும்   தென்னங்கீற்றே!

உன்னால்

என்  கண்களுக்குள்

கலவரம் ,

நீ

சொர்க்லோக    ரம்பையா? 

இல்லை,

தன்    அழகுக்கு   இணைக்காண

தேவதை    தேடிக்கொண்டிருக்கும்

தேடலா?   என்று,.........



            36).கன்னக்குழி  தேசம்

உன்  கன்னக்குழித்

தேசத்தில்

என் கற்பனை  மலையிலிருந்து

கல்   கோட்டை     ஒன்று

கட்டிவிட்டேன் ,

நீ

என்றுதான்   வருகைதருவாய்

உன்   புன்னகை எனும்

சொர்கவாசலைத்  திறந்திட.......


               37).நினைவுச்  சிறை

உன்     நினைவுகள்

எனும்   சிறையில்

நான்   அடைப்பட்டுக்கிடக்கையில்,

நீ

என்னைப்  பிரிந்து

வெகுதுாரம்     சென்றுவிட்டாயே !

  நான்

உன் கண்களால்

கைது செய்யப்பட்டவன்    தான் ,

அதற்காக   எனக்கு

ஆயுள்தண்டனை

கொடுத்துவிடாதே!

விரைவில்  வந்து

விடுதலை செய்துவிடு..........



38).பெண்ணே!

என் மரணம்   மட்டும்

உனக்குத்    தெரிந்தால்,

உன்  மெளனம்    எனும்
\
மலர்   தூவி

எனக்கு   மெளன  அஞ்சலி

செலுத்தி   விடாதே!

என்  மரணமே

உன்   மெளனத்தால்தான் ...........



39).நினைவே!

நீ     எங்கிருந்தாலும்

உன்  அழகின்    முன்னேற்றத்தை  ,

உன்     கூந்தலுடன்

கொஞ்சி    விளையாடும்

தென்றலிடம்   சொல்லி

எனக்குத்    தூது   விடு,

அவைதாம்

சிந்தாமல், சிதறாமல்  எடுத்துவரும்

உன்    அழகை......

          40). முத்தம்

அன்றொரு    நாள்

என்  கன்னத்தோட்டத்தில்

உன்   முத்தத்தைப்

பயிரிட்டாயே!

அன்று   முதல்

அமோக   விளைச்சல்   தருகிறது

என்   தாடி ......


41).நான்

உனக்கு  வாங்கி  கொடுத்தக்

கொழுசைக்    கண்டு

அனைவரும்

அதிசயிக்கிறார்களே!

கோகினூர்   வைரத்தை

உன்

கொழுசில்   பதித்த  பின்புதான்

அது  கொள்ளை  அழகு

பெற்றுவிட்டதாம்.


இருக்காதா   என்ன ,

அது   இருக்கும் இடம்

                                         அப்படி........


செவ்வாய்   கிரகத்தில்

உயிர்கள்    வாழலாம்

என்பதை

உறுதி    செய்ததைப்   போல ,


43).ஒரு   நாள்

என் காதலை

ஏற்று கொண்டாயே!

அன்றைய   தினம்  ,

உன்னிடத்தில்

ஒரு காதல் பரிசைக்   கொடுத்து

நான்

ஒரு திருடன்  என்றேன் ,

திடுக்கிட்ட  உன்   கண்களில்

பெருக்கெடுத்து    நீர்

ஆம்

உன் அழகையெல்லாம்  திருடி

கவிதைகளாக்கிய

அழகுத்    திருடன்   என்றேன்  ,

வெட்கத்தால்

செல்லமாய்   ஒரு   அடி

அடித்து விட்டு

என்   மார்ப்பில்  சாய்ந்துகொண்டுடாய்...........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை மேகங்கள் 1