இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா

தொப்புள் கொடி உறவில் உயிர்த் தந்தவளே! என்னைக் கருவில் சுமந்தவளே! பிறக்கும் முன்னே உனக்கு  சுமையானேன் என்னை விடுவித்து விதி  செய்தவளே! எந்தன் வருகையை கண்நீரால் வரவேற்றவளே!  மடியில் தவழ்ந்தேன் சிராட்டினாய் மார்பில் சுமந்து தாலாட்டினாய் நான் உறங்க தூக்கம் துலைத்தவளே!  என் தவறுகளை திருத்தி நெறி செய்தவளே! தினந்தோறும் காலையில பள்ளி செல்லும் வேலையில விழிகளில் நீர்   பெருக கை  அசைத்து விடை  சொன்னவளே! சிறுவாட்டுக்   காசெடுத்து சில்லரையா சேத்துவச்சு பட்டம் படிச்ச மகனுக்கு பணம் அனுப்பி வச்சவளே! பொழுது சாயும் வேலையில பறவைகள் அடையும் சோலையில வழி மேல விழி வச்சு வரும் வழியை எதிர்பார்த்து நின்னவளே! இவையெல்லாம் எதற்கு என்னைப் பத்து மாதம் வயிறு சுமந்த பிஞ்சு பிரபஞ்சமே நான் வைக்கும் ஒரு தனல் நெருப்பிற்காகவா!!!................                                                        ...

தமிழ்க் கனி

செம்மொழி அருவியினிலே செழித்து  வளர்ந்தச் செடி! மா மனிதரெல்லாம் மகிழ்ந்து  வளர்த்தச் செடி!! சொக்கவிக்கும்  அழகிலோ சோலைவனமாய் !! நாட்டியமாடும்  அழகிலோ நந்தவனமாய்!! வஞ்சகர்க்கும் தலைவணங்காத வசந்த  வனமாய்!! மங்காத மனமுடைய மலர்வனமாய்!! விந்தைகள் பல செய்யும் வித்தகக் கனியாய்!! வளம் கொளிக்கும் இன்பக் கனி !! இனியக் கனி!! சந்தச் சுவையால் சதைபெருத்த கனி !! காண்போரைஎல்லாம் கவர்ந்திலுக்கும்  கனி!! இயலாய் முளைத்து இசையாய் வளர்ந்து நாடகச் சுவையாய் நாவில் நவிழும் முத்தமிழ்க் கனி!! நான் சுவைக்கும் சத்த்துள்ளக் கனி என் தமிழ் கனி!!!

அன்புள்ள அம்மா

முந்தானைப் பாசத்தால் என் முகம் துடைத்தவளே! மார்பில் சுமந்து என்னை உறங்கவைத்தவளே!! அடுப்படி புகையிலும் என்னை அழகாய் வளர்த்தவளே!! கால்வயிற்றுக் கஞ்சியிலும் என்னைக் கலக்காமல் காத்தவளே!! ஊண் உறங்க்கமின்றி என் உடல் வளர்த்தவளே! என்னை வளர்க்க நீ அல்லவா மெலிந்து கிடந்தாய்!! உன் பசி மறந்தல்லவா என் பசி தீர்த்தாய்!! பள்ளிப் பருவம் படர்ந்தது, வாலிபச் சிறகு முளைத்தது, வயதோ ஒரு வரம்பை எட்டியது! பருவம் அடைந்து பாதை  மாறி  தாய்ச் சொல்லைத் தட்டி எவளுக்கோ தாலிக் கட்டி, தாய்ப் பாசத்தை மறந்தேன்! தாரத்தோடு வானில் பறந்தேன் !! இன்றோ  நான்  ரேமண்டில் ஆடை எடுக்கிறேன்!! நீயோ ரேசன் சேலை கூட  இல்லாமல் வாசல் ஓரம் கிடக்கிறாய்!! என் மனைவிக்கோ போத்திஸுல்  புடவை] எடுக்கிறேன்! நீயோ போர்த்திக்ககூட  துணியில்லாமல் ஒரு  தூணோரம் கிடைக்கிறாய்!! இருந்தாலும் எதற்கு, பாசத்திற்குக் கொள்ளிவைத்தாற்போல் ஒரு நாள்  இந்தப் பாவிக்கும் கொள்ளிவைக்கமாட்டானா என்றுதானே??............
வணக்கம் நண்பர்களே நான்    சி.கெளதம்  .நான்  பாரதிதாசன் உறுப்பு கல்லூரி நவலூர் குட்டப்பட்டடுவில் M.sc (Maths)  படித்து வருகிறேன்.எனக்கு கவித்திறமை உள்ளதால் இந்த வலைபதிவில் தமிழ் கவிதைகள் எழுதுகிறேன்.