அம்மா

தொப்புள் கொடி உறவில்
உயிர்த் தந்தவளே!
என்னைக் கருவில் சுமந்தவளே!
பிறக்கும் முன்னே
உனக்கு  சுமையானேன்
என்னை விடுவித்து
விதி  செய்தவளே!
எந்தன் வருகையை
கண்நீரால் வரவேற்றவளே!
 மடியில் தவழ்ந்தேன்
சிராட்டினாய்
மார்பில் சுமந்து
தாலாட்டினாய்
நான் உறங்க
தூக்கம் துலைத்தவளே!
 என் தவறுகளை திருத்தி
நெறி செய்தவளே!
தினந்தோறும் காலையில
பள்ளி செல்லும் வேலையில
விழிகளில் நீர்   பெருக
கை  அசைத்து விடை  சொன்னவளே!
சிறுவாட்டுக்   காசெடுத்து
சில்லரையா சேத்துவச்சு
பட்டம் படிச்ச மகனுக்கு
பணம் அனுப்பி வச்சவளே!
பொழுது சாயும் வேலையில
பறவைகள் அடையும் சோலையில
வழி மேல விழி வச்சு
வரும் வழியை
எதிர்பார்த்து நின்னவளே!
இவையெல்லாம் எதற்கு
என்னைப் பத்து மாதம்
வயிறு சுமந்த
பிஞ்சு பிரபஞ்சமே
நான் வைக்கும்
ஒரு தனல் நெருப்பிற்காகவா!!!................


                                                                                                       அன்புடன்

                                                                                                         சி. கெளதம்
                                                                       


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை மேகங்கள் 1

கவிதைக் மேகங்கள்