கவிதை மேகங்கள் 1
1).வர்ணித்த நினைவு
என் இதயத்தில்
நிரம்பி வழிந்த
உன் நினைவுகளெல்லாம்
என் இதயத்துடிப்பையும் உனதாக்கியது
இரத்த ஓட்டத்தில் கலந்த
உன் நினைவுகளெல்லாம்
நித்தம் உன்னைக் காணவே ஏங்கின
நீ என்னைக் கடந்து செல்ல
உன் அழகினை நெருங்கி அடையாளம் கண்டேன்
புடவை கட்டிய புல்லாங்குழலே
சிற்பிகளெல்லாம்
செதுக்கமறந்த சிலையே
உன்னை வர்ணிக்க வாய்ப்பளிக்க
என் வரிகளுக்கெல்லாம்
நித்தம் உன் நினைவூட்டுகின்றேன்
என்றும்உன்னையே வர்ணிக்க.......
2).சிந்தும் அழகு
உன் முகத்தில் விழுந்த
முதல் மழையும்
என் கண்களில் வழிந்த
முதல் துளியுமே அறியும்
நீ
இந்த பிரபஞ்சமே போற்றும்
பேரழகி என்று...........
3).வார்த்தைகளைத் தேடி
பெண்ணே!
உனக்கு மட்டும் ஏன்
இத்தனை அழகு!
வார்ணித்துக்கொண்டே போகிறேன்
அழகாகிக் கொண்டே தொடர்கின்றாய்
உன்னை வார்ணித்த வரிகளைக் கடந்து,
வெகு தூரம் தேடிச் செல்கிறேன்
உன் வர்ணனைக்கான வார்த்தைகளை,
முத்தமிழிலும் முழிகிப் பார்த்தேன்
வார்த்தைகளுக்கு வலைவீசி,
மூச்சு மட்டும் தினறியது
முன்னேற்றம் இல்லை,
வர்ணனை செய்ய முடியா
வஞ்சிக் கொடியே!
வர்ணிக்க
வார்த்தைகளே படைக்கப்படா
பேரழகியா நீ!!!!
4).இருண்ட என் கவிதைகள்
பெண்ணே!
நீ இரவில் உறங்கும்போதேல்லாம்
உன் அழகு விளக்கை
அனைத்து விடுகின்றாய்,
அதனால் தான்
என் கவிதைகளெல்லாம்
இருட்டாகிவிடுகின்றன........
5).அள்ளித் தெளித்த அழகு
பெண்ணே!
நீ இருக்கும் இடமெல்லாம்
உன் அழகை
அள்ளித் தெளித்துவிடுகிறாய் போலும்,
அதனால் தான்
நீ இருக்கும் இடமெல்லாம்
அழகாவே காட்சியளிக்கின்றன........
6).என் பேனாவின் காதல்
என் காதலை
என் பேனாவிடம் விற்றுவிட்டேன்,
அது உன் நினைவுகளை
மையாக்கி
கவிதையாய் வடிக்கின்றது,
என்றாவது ஒரு நாள்
உன் கண்கள்
அந்த கவிதைகளைத் தரிசிக்கும்
அன்று என் பேனா
வேறொருவருக்கு சொந்தமாகியிருக்கும்.......
7).ஒரு கவிதையின் வெட்கம்
அன்றொரு நாள்
நான்
உனக்கு எழுதிய
கவிதையினை வாசித்துவிட்டு ,
நீ
கைகளால்
உன் கண்களை மூடி
வெட்கப்பட்ட பொழுது ,
உந்தன்
உதட்டோரம் வழிந்த புன்னகை
எந்தன்
உயிர் தடவியது ,
இனிமையை மணந்த
உன் குரல்
மெளன இசை வாசிக்க
ஒரு கணம்
உன் கண்களில் வழிந்த
புன்னகை நீரினால்
என்
காதல் தாகத்தை
தீர்த்து வைத்தாய்.....
8).கடல் தேவதை
அழகிய மாலை நேரம்
அந்த கடற்கரை
வழக்கம் போல் இல்லாமல்
சற்று அழகாகவே காட்சியளித்த
உன் வருகையினால்
ஒருவேளை கடல் தேவதைதான்
கரைக்கு வந்துவிட்டாளோ என்று
அலைகளெல்லாம்
ஆர்ப்பரித்துக் கொண்டு
கரையை நோக்கி விரைந்தன,
நீயோ
நகரும் கலங்கரைவிளக்கமாய்
அங்கும் இங்குமாய்
ஓளி வீசிக்கொண்டிருக்கிறந்தாய்!
உன் பாதத்தின்
சுவையறிந்தன
நீ நடத்து சென்ற
கடற்கரை மணல் வெளி,
உன் பாதம் பட்ட
இடத்தைஎல்லாம்
அள்ளிச் சென்றன
ஆர்பரித்து வந்த அலைகள்,
படகேறிய பவளக் கொடியாய்
நீ படகேறி
பயணம் செய்ய,
துள்ளி எழுந்த
மீன்களெல்லாம்
துடுப்புகளாய்ப் பணியாற்ற,
சூழ்ச்சி செய்து
அலைகள்
உன் படகை சுமந்து செல்ல,
கப்பல் பயணம் செய்யும்
கடல் கண்ணியே!
உன் அழகில் வியந்த
அலைகளுக்கோ
நீ கடல் தேவதை!!
அடியவள் எனக்கோ
நீ கனவு தேவதை!!!!
9).உருகும் நினைவுகள்
காஷ்மீர் பனிக்கட்டியாய்
உருகும்
உன் நினைவுகள்
கடலாய்
பெருகி நிற்கின்றது
என் கவிதையில்..........
10). பரவச தேடல்
எங்கேனும்
ஓளிந்து கொண்டு
ஒவ்வொரு நாளும்
என் கண்கள்
பரவசமாய் தேடும் ,
கார்மேகங்கள் சூழ்ந்த
கல்லூரிக்குள்
கால் முளைத்த நிலவாய்
ஓளிவிசும்
உன் வருகையை......
11).என் கவிதையின் விருந்தாளிகள்
நகரா நிலவை
அழைத்துக் கொண்டு
நகர்ந்து வந்த மேகங்கள்,
பூக்களைக் குளிப்பாட்டும்
மார்கழி மாதத்தும் பனி,
துள்ளி எழுந்த மீன்கள்
அள்ளி எடுத்து வரும் அலைகள்,
குளிர்க் காற்றுடன்
தென்றலை முத்தமிட அழைக்கும்
பூக்கள்,
அழம் தெரியாமல்
குதித்து விளையாடும் அருவிகள் ,
தோட்டத்து வீட்டை
அலங்கரிக்கும் வயல் வெளிகள்,
இவை அனைத்தும்
உன் அழகை
அலங்கரிக்க வந்த
என் கவிதைகளின்
"விருந்தாளிகள்".........
12).என் கவிதைகளில் நீ
நம் கல்லூரியின் நடைபாதை
என் கவிதைகளின்
" பிறப்பிடம்"
உன் வருகையே
என் கவிதைகளின்
" செழிப்பு"
உன் அழகு
என் கவிதையின்
" முகவரி"
உன் புன்னகையே
என் கவிதைகளின்
"உயிர் முச்சு"
பூச்சுட்டிய உன் கூந்தல்
என் கவிதைகளின்
"அலங்கரிப்பு"
உன் கண்களே
என் கவிதைகளின்
"வழிகாட்டி "
உன் பார்வையே
என் கவிதைகளின்
"தடுமாற்றம்"
உன் இமைகளே
என் கவிதைகளின்
"கதவு"
உன் உதடுகள்
என் கவிதைகளின்
"இதழ்கள்"
உன் கன்னக்குளி
என் கவிதைகளின்
"கலைநயம்"
"மரணம்"
114).தேடும் நினைவுகள்
பெண்ணே!
உன்னைக் காணாத ஏக்கத்தில் உள்ள
என் கண்களுக்கு
ஆறுதல் கூறவே
உன்னைத் தேடிய நிலையில் உள்ளன
என் நினைவுகள்........
15).பெண்ணே
தினமும்
உன்னைக் காணவரும்
காதல்ச் சாலையில்
நான் வரவில்லை
என்பதற்காக,
நான்
உன்னை மறந்துவிட்டேன்
என்று நினைத்துவிடாதே !
வேகத்தடை பல
போட்டுள்ளேன் ,
விபத்து நடந்துவிடக்கூடாது
என்பதற்காக ,
அனாலும் நான்
அந்தச் சாலையில்
கவனமான
கவிதைப் பயணம் ஓன்று
செய்து வருகிறேன் ,
கண்மணியே
உன்னைக் காண !.....
16).இந்த உலகில்
கவிதைகளுக்காக் படைக்கப்பட்ட
வார்த்தைகள் அனைத்தும்
உன்னிடத்தில் உள்ளன,
அவைகளின்
உன்
புன்னைகையின் வழியே
உன்
பார்வைகளின் வழியே
உன்
வெட்கத்தின் வழியே
உன்
கூந்தலின் வழியே
உன்
கலையழகின் வழியே
என்று
அவ்வபோது
உன்னிடத்தில் சிந்திய
அந்த வரிகளை
நான்
என் பேனாவில்
சேமித்து விட்டேன்,
உன்னை அந்தபேனாவில்
ஒவ்வொரு நாளும்
கவிதைகளின் வடிக்கின்றேன்
என் காகிதங்களில்...........
உன் இடை
என் கவிதைகளின்
"மெல்லிய நடை"
உன் பிரிவு
என் கவிதைகளின்
"மரணம்"
13).பாலைவனச் செடி
பாலைவனம் போல் இருத்த
என் இதயத்தில்
உன்னைக் கண்டது முதல்
பொழியத் தொடங்கின
காதல் மழைத் துளி.......
உன்னைக் காணாத ஏக்கத்தில் உள்ள
என் கண்களுக்கு
ஆறுதல் கூறவே
உன்னைத் தேடிய நிலையில் உள்ளன
என் நினைவுகள்........
15).பெண்ணே
தினமும்
உன்னைக் காணவரும்
காதல்ச் சாலையில்
நான் வரவில்லை
என்பதற்காக,
நான்
உன்னை மறந்துவிட்டேன்
என்று நினைத்துவிடாதே !
வேகத்தடை பல
போட்டுள்ளேன் ,
விபத்து நடந்துவிடக்கூடாது
என்பதற்காக ,
அனாலும் நான்
அந்தச் சாலையில்
கவனமான
கவிதைப் பயணம் ஓன்று
செய்து வருகிறேன் ,
கண்மணியே
உன்னைக் காண !.....
16).இந்த உலகில்
கவிதைகளுக்காக் படைக்கப்பட்ட
வார்த்தைகள் அனைத்தும்
உன்னிடத்தில் உள்ளன,
அவைகளின்
உன்
புன்னைகையின் வழியே
உன்
பார்வைகளின் வழியே
உன்
வெட்கத்தின் வழியே
உன்
கூந்தலின் வழியே
உன்
கலையழகின் வழியே
என்று
அவ்வபோது
உன்னிடத்தில் சிந்திய
அந்த வரிகளை
நான்
என் பேனாவில்
சேமித்து விட்டேன்,
உன்னை அந்தபேனாவில்
ஒவ்வொரு நாளும்
கவிதைகளின் வடிக்கின்றேன்
என் காகிதங்களில்...........
நானும் ஒரு கவிஞனைப்போல் உணர்கிறேன் இக்கவிதைகளினை படிக்கும் போது..
பதிலளிநீக்கு