மலர்

 1).  முத்தக் கவிதை 

எங்கே

உன்   இதழ்கள்

எனும்   பேனாவால்

என் கன்னக்காகிதத்தில்

மூன்று   வரியில்

முத்தக்   கவிதை   ஒன்று

எழுது .....



2).தெரியாமல்தான்    கேட்கிறேன்

உன்

மொத்த அழகையும்

குத்தகை செய்து   கொண்டதா ?

உன்

              உதட்டோரம்

                            மச்சம்......




3).வாரம்   ஒருமுறை

பூமிக்கு    வந்துவிடுகிறாள்

தேவதை

                 தாவணி

                                  உடுத்துகையில்






4).உன்   முக(ம்)லாய   பேரரசில்

கடும்   தண்ணிர்  பஞ்சமாம்

கைகுட்டையால்   நீ

முகத்தைத்

(வியர்வைத்)   துடைத்தது
 
                                                           முதல் ........



5).உன்

புன்னகை   செடிக்குத்

தண்ணிர்  ஊற்றத்தான்

வெட்டப்பட்டதா?

உன்    கன்னகுழி.......



6).ஒவ்வொரு   நாளும்

உன்   பார்வை   அம்பை

பூக்கள்    ஏந்தி   தொடுத்தாயே!

என்

         காதில்

                     வைக்கத்தானா!!!!



7).நான் 

எதை   வென்றால்   தான்

கிடைக்கும்?

உன்

உதடுகள்    தரும்

முத்தப்  பரிசு ......



              8).   அழகின் அகராதியே

என்

கற்பனை   அகராதியில்

காணவில்லை.

உன்

அழகின்  அகராதியில்

சில   பக்கங்களைப்

புரட்டிக்   காட்டு ,

உன்

அழகை   வர்ணிக்கும்   வரிகளை

நான்

அடையாளம்

       காணவேண்டும்......



9).நாளை

உன்  வீட்டுக்கு

வருகிறேன்   என்று சொன்னதும்  ,

நாளை   நான்

தாவணி   கட்டிக்கொள்கிறேன்

என்று   ஆசையாய்ச்

சொன்னாயே!!

சாப்பிட்டு  முடித்தபின்

உன்  முந்தானையால்

என் கைத்துடைக்கத்தானே!!!


  10).  அழகுச்    சிறை


இமைகள்  எனும்

சிறகடித்து

என் பார்வைப்  புறா

உன்னைக்     பார்க்கத் தினழும்

பரிதவித்ததே!!!

உன்

அழகென்னும்   கூண்டுக்குள்

அடைப்பட்டுக்   கிடக்கத்தானா !!!


11).உன்னிடத்தில்

குறும்புத்தனமாய்

நான்    கேட்கும்

கேள்விகளுக்கெல்லாம்

உன் வெட்கத்தாலே

விடை  எழுதுகிறாயே!!!

உன்   புன்னகை

எனும்   பேனாவைக்    கொண்டு

என் காதலெனும்  காகிதத்தால்........



12).நல்லவேளை

நீ  கடவுளை   தரிசிக்கையில்

கண்களை    மூடிக்கொள்கிறாய்!!

இல்லையென்றால்

உன் கண்ணழகைக்    கண்டு

கவிழ்ந்திருப்பார்  கடவுள்.........



13).அழகான    பள்ளம்

பார்த்துச் செல்லவும்

என்று   பலகையாவது

வைத்திருக்கக்   கூடாதா?

உன்னை

இரசித்துக்   கொண்டே   சென்று

கவிழ்ந்து     விட்டேன்

உன்    கன்னக்குழியில்........



14).என்   கைவிரல்கள்

கலைநயம்  பெற்றுவிட்டன!!

முதன்    முதலாய்

உன்னை    என்னிடம்

கைகுலுக்கி   அறிமுகம்

செய்து   கொண்டாயே

அன்று   முதல் .......



16).தேவதையை

நேரில்    கண்டிருப்பானோ!

உனக்கு

ஆடை      நெய்தவன் .....


17).உன்

வேட்கச்சோலையில்தான்

உற்பத்தியாகிறதா?

உன்

புன்னகை   ஊற்று.......




18).உன்   வீட்டில்   மட்டும்

தினம்தோறும்

நிலவு  தோன்றுகிறதாமே!

கண்ணாடியில்   நீ

முகம்  பார்க்கையில்........



19).என்

வழியின்   வழிவந்த

புதுக்    கவிதையே!

நீதான்

எத்தனைக்    காலம்

அழகை எல்லாம்

ஆண்டு  வந்தவளோ???



20).உன்  வீட்டு   முகவரிக்கே

வந்து  விடுகிறதாமே!!

அழகு

என்ற  சொல்   இடம்பெற்ற

கடிதங்களெல்லாம் !!!




21).என்  எழுதுகோல்

உன்னைக்   கண்டபின்புதான்

அழகு  என்ற  சொல்லையே

அழகாக   எழுதுகிறது.......




22).முகம்

துடைப்பவர்களைஎல்லாம்

அழகாக்கி   தோழியிடம்

கடன்  வாங்கி

முகம்    துடைத்தாயே

அந்தக்   கைக்குட்டை.........



23).என்   கற்பனைச்   சிகரத்தின்

உச்சிக்கே   சென்றுவிட்டான் !!

உன்

உதட்டோர  மச்சத்தை

வர்ணிக்கும்  அந்த

சில    வரிகளைத்   தேடி........


24).நீ

ஒவ்வொரு நாளும்

பூச்சூடிக்கொள்ளுகையில்

என்

கவிதைகளெல்லாம்

அலங்கரிக்கப்படுகின்றன.......



25).பூக்களுக்குள்

அழகிப்   போட்டியா   நடக்கிறது?

உன்    கூந்தலில்........



26).பல    இடங்களில்

குடைக்குள்தான்    பொழிகின்றன

முத்தமழை...... 



27).தண்ணிர்   தீர்த்தமாகிறது ,

கிணற்றடியில்   நீர்   இறைத்து

நீ   குளிக்கையில்.......



28).புன்னகை   எனும்

கச்சேரியில்

வெட்கம்   எனும்

விரல்கள் கொண்டு,

கண்கள்  எனும் நரம்பால்

காதல்   இசை

மீட்டுகின்றாயே ,

உன்

அழகெனும்   வீனைக்குள்

இப்படி   ஒரு அதிசயமா!!!!



29).உன்னிடம்

அனுமதி  கோரி   வந்துள்ளேன்  ,

பூக்களைளெல்லாம்

வர்ணிக்கவிருக்கின்றேன் ,

அழகென்ற   சொல்லையே

பயன்படுத்திக்   கொள்ளவா???


30).அடடா!!

இவ்வளவு  அழகு

கொட்டிக்   கிடக்கிறதே!!

நீ

வளர்த்த

மரத்தடியில்......



31).ஒவ்வொரு   முறையும்\

உன்

பார்வைத்    தூண்டிலை

வீசுகின்றாயே!!

நான்

மீன்   அல்ல ,

நீர்   என்று   தெரிந்தும் .......


32).இரண்டு

பலாச்சுளைகள்

என்   கன்னத்தில்

விழுந்தன ...

அவளின்

முத்த   மரத்திலிருத்து........




                                       பாகம் ------- இரண்டு


1).சிகப்பு  மையிட்ட

பேனாவால்

என் கன்னத்தில்

எழுதிக்காட்டு

" முத்தம் "

என்ற   சொல்லை மட்டும்



2).நான்  உன்னை

கேலி  செய்யும் போதெல்லாம்

உன் தோழிகளுக்குப் பின்னால்

ஒலிந்துகொள்வாயே ,

வெட்கத்தையெல்லாம்

சேர்த்து வைத்து

எனக்கு  விருந்து   வைக்கப்படுகிறாயோ!!!



3).தேசப்பிதாவே!

அகிம்சை  வழியில்தானே

வாழச்சொன்னாய்!

அதனால்   தான் என்னவோ

இன்றும்

அகிம்சையாகவே

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!!

"இலங்கைத்   தமிழர்   பிரச்சனையில்"



4).தமிழை   நேசித்தேன்

எந்தன் நாசிவழி சுவாசித்தேன்!!

தமிழனெல்லாம்  நேசித்தேன்

தமிழைத்தான் சுவாசித்தேன்!!

இன்று

முச்சுத்  தினறுதடா!!

நெஞ்சு  பதறுதடா!!

கவலைப்படாதே  எந்தன்  கற்றமிழே!!

செயற்கை    சுவாசமாவேனே!

எந்தன்

செந்தமிழை   வளர்த்திடுவேனே!!!



   4).    கல்லறைக் கவலை


இந்த   உலகில்

கவலை இல்லாத  மனிதர்கள்

கல்லறையில்  தான் இருக்கின்றார்கள்

என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ,

இன்று

அவர்களிடத்திலும்  ஒரு கவலை

தங்கள்    இடத்திலும்

"பிளாட்  போட்டுவிடுவார்களோ" என்று



5).நான்தான்

இந்தியாவை

வல்லரசாக்கப்   போகிறேன்

என்பது தெரியாமல் ,

என்னை

வீசி  எரிந்துவிட்டாள் ,

ஆம்

குப்பைத்  தொட்டி

குழந்தை   நான் .......


6).காதலில்   தோற்றவனுக்கு...


அடியே !

உன்னைக்    காதலித்து

என்ன  பயன்  ,

கவிஞனாகத்தான்    ஆனேன்,

உன்

கணவனாகவில்லையே!!!



7).நீ

கோவிலில்   உடைத்த

தேங்காயில்

பூ   விழுந்ததாமே!

அதனால்தான்

நீ

கூந்தலில்

பூ   வைப்பதில்லையோ!!!



     8). ஆடை நாகரிகம்

அன்று

வளையாபதி  ஒலித்தது

ஆடையில்லாத    அழகு

பெருமை  அடையுமா?

இன்று

நான்    ஒலிக்கின்றேன்

குறை ஆடை

நிறை  அடையுமா?

இடை  தெரிய

உடை  உடுத்தும்

இளம்   பெண்களே!

இது  என்ன  ஆடை  நாகரிகமா?

இல்லை  ஆண்களைக்  கவரும்  வசீகரமா?

இல்லை

அன்னியர்  கற்றுத்தந்த   அநாகரிகமா ?

இல்லை  தமிழர்    நாகரிகம்   மீதான

அகங்காரமா?

ஆண்களுக்கு  மட்டும்   தானா

ஆடை    நாகரிகம் ......




9).அதிகாலத்து   மனிதா

இன்றைய   உலகம்

உன்னைத்தான்  பின்பற்றுகின்றது ,

ஆடை உடுத்துவதில் ...

நீ   கற்களை   உரசி

நெருப்பைக்    கொணர்ந்தாய் ,

இவர்கள்   கண்களில்   உரசி

காமத்தை  கொணர்கிறார்கள்......



10).கொலையுண்ட     காதல்


ஏழைகளின்  காதல்

பல    கொலைகளின்

வறட்டு    கெளரவத்தால்

வதைந்து     போகிறதே!

பூப்பெய்தி  பெண்தானே  அவள் ,

அப்புறமும்   எதற்கடா

அவளுக்கு  அரிவாள்   வெட்டு  ,

காதல்  சாதியை

உங்கள் கெளவர  சாதியால்

கொன்றுவிட்டிர்களே !!

அந்த  பிஞ்சு  நெஞ்சங்களுக்கு

தெரியவில்லையடா

இந்தச்    சாதி  வேற்றுமை !!

சாதி  வெறிச்   சமுதாயமே!

நீங்கள்    வெட்டிய   அரிவாள்

எந்த சாதியென்று   தெரியுமா?

இன்னும் எத்தனை

பாரதி   வேண்டும் ?

உங்களின்   சாதி

ஆணவத்தை   அழிக்க.......


     11). பணம் 

இவன்

ஏழைகளின்     முதல்   எதிரி

ஊழல்வாதிகளின்

உடன்பிறப்பு !

அரசியல்வாதிகளிடம்   மிகவும்

நெருங்கிப்  பழகுவான்  ,

நீதி  தேவதைகூட

இவன் கட்டுப்பாட்டில்தான்

இருக்கின்றாள்

இவன் இருக்கும் இடத்தில்

நோய்கள்  ஏதும்  நுழையாது ,

இவனே    காரணம்

செத்தவன்   பிழைத்தற்கும் ,

வாழ்ந்தவன்    செத்தற்கும் ,

பல   மருத்துவமனைகளை

இவன்தான்   விரிவுபடுத்தியிருக்கிறான் ...

இன்று

காதல்   கனிகூட

இவன்  இருந்தால் தான்

கனிகிறது ...

பல்வேறு   துறைகளில்

இவன் முக்கியப்  புள்ளி ,

லஞ்சம்   என்று  சொன்னால்

அனைவருக்கும்    தெரியும்...

கல்வியைக்கூட

வியாபாரமாக்கி

கற்பனை  செய்து   கொண்டிருக்கிறேன் .....

விலகிச்   செல்கிறான் ,

என்று விட்டுவிடாதீர்கள்  ,

ஏழையாய்ப்   பிறந்தவன் எல்லாம்

எங்காவது  கண்டு

பழக்கம்    வைத்துக்கொள்ளுங்கள் ,

சாகும்    பொழுது

சவப்பெட்டி  கூட

இவன் இருந்தால்   தான்

செய்வார்கள்..........

 

      12).  புன்னகைப்    புதையல் 


உன் அழகைக்

கவிதையாக்கும்   முயற்சியில்

தோற்கடிக்கப்பட்டேன்  ,

வார்த்தைகளுக்குள்   நடந்த

வாள்ச்சண்டையில்...

கவி   புனைய முடியா

கலையழகியே!!

உன் உதட்டுக்குள்    இருக்கும்

புன்னகைப்   புதையலை

வேட்கத்திடம்   சொல்லி

வெளியில்    எடு ,

உன் அழகுனாட்டுக்குச்

சொந்தமான   அந்தப்

புதையலை ,

என்  கவிதை நாட்டுக்குக்

காநிக்கையாய்க்   கொடு ,

காலமெல்லாம்,

கவிதை மழை   பொழியட்டும் .......


   


13).வறுமையும்   வாழ்வும்


வறுமையும்   நானும்

ஒட்டிப்பிறந்த

ரெட்டைப்   பிள்ளைகள்,

பட்டினியோ

இரண்டு    நாட்களுக்கு

ஒருமுறை

என்   வீட்டுக்கு    வந்துபோகும்

விருந்தாளி ,

அடுப்படியில்

அணையும்   நெருப்பை

ஊதி   ஊதி

ஊதுகுழாயாய்

உருகிப்போன   என்  தாய் !!

கரைந்துகொண்திருக்கும்

பின்பக்க   சுவர்போல்

போதையில்

உறைந்து   கொண்டிருக்கும்

என் தந்தை !!

ஓட்டைக்     கூரைவளி

ஓராக்கண்களால்

ஓய்யாரமாய்    ஒளிவீசும்

ஒற்றை  நிலவு!!

கிழிந்தும்    கிழியாத

கால்ச்சட்டையோடு ,

வறுமையை   சுமந்துகொண்டு

பள்ளிக்குச்   சென்றுவந்தேன்

பாவமாய்

நேர்கோட்டையும்

செங்குத்துக்     கோட்டையும்

வரைந்த்வர்களுக்கு    மத்தியில்

வறுமைக்   கோட்டை  மட்டுமே

வரையமுடிந்தது  என்னால்!!

மனித

நோய்களுக்கெல்லாம்

மருந்து   கொடுக்கும்

மருந்தவ  மேதைகளே!

இந்த   வறுமை   நோய்ககு

ஒரு   வைத்தியம்

பார்க்கக்கூடாதா?...





14).முத்தமிழ்க்   கனி !!

நான் சுவைக்கும்

சத்த்துள்ள    கனி!!

என் தமிழ்கனி!!!



    15). அரசியல்   சாசனம்

அரசியல்வாதிகளெல்லாம்

சொகுசுப்  பேருந்தின்

இருக்கையில்   இருக்க ,

தொண்டர்கள்   தான்

படியில்

தொங்கிக்   கொண்டிருக்கிறார்கள்.....


16).ஹைக்கூ :-

குடும்பத்தோடு

ஒலிந்து    விளையாடுகிறோம்

கடன்காரன்  வரும்போதெல்லாம் ...




17).குறைந்த விலையில்

வீட்டுமனைகள்

காவிரி  ஆற்றின்   குறுக்கே......


18).படியில்   பயணம்

நொடியில்  மரணம்  ,

ஆம்

ஜன்னலோர   இறக்கையில்

இருக்கும்   அவளின்

அழகை   இரசித்தால் ......



19).கர்நாடக அரசே

கொஞ்சம்   கருணை  காட்டு ,

நீங்கள்   மட்டும்  தண்ணிர்

விடவில்லை  என்றால்

காய்ந்து   கொண்டிருக்கும்

காவிரி   ஆற்றை

என்   நாட்டவன்

வீ ட்டுமனைகளாக்கி

விற்றுவிடுவான்......




20).என்னதான்

உன்   தந்தை

மளிகைக்  கடை

வைத்திருந்தாலும்

அரை  கிலோ  அழகை

உன்னால்   தானே

தரமுடியும்.....



21).அழகான   சிலைகளெல்லாம்

உன்   அழகைக்  கண்டு

திகைத்துப்போய்   கேட்டன

இந்தச்   சிலைக்கு

உயிர்  கொடுத்த

சிற்பி   யாரென்று ...

நான் எப்படிப்

புரியவைப்பேன்

அவர்தான்   உன்

தந்தையென்று.......




23).ஏழை 


பசித்துப் பசி

ஆம்

பசிக்கிறது

ஆனால்

புசிக்க   வழியில்லை

ஏழைக்   குடிசையில்.......   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை மேகங்கள் 1

கவிதைக் மேகங்கள்