கவிதை மேகங்கள் 1
1).வர்ணித்த நினைவு என் இதயத்தில் நிரம்பி வழிந்த உன் நினைவுகளெல்லாம் என் இதயத்துடிப்பையும் உனதாக்கியது இரத்த ஓட்டத்தில் கலந்த உன் நினைவுகளெல்லாம் நித்தம் உன்னைக் காணவே ஏங்கின நீ என்னைக் கடந்து செல்ல உன் அழகினை நெருங்கி அடையாளம் கண்டேன் புடவை கட்டிய புல்லாங்குழலே சிற்பிகளெல்லாம் செதுக்கமறந்த சிலையே உன்னை வர்ணிக்க வாய்ப்பளிக்க என் வரிகளுக்கெல்லாம் நித்தம் உன் நினைவூட்டுகின்றேன் என்றும்உன்னையே வர்ணிக்க....... 2).சிந்தும் அழகு உன் முகத்தில் விழுந்த முதல் மழையும் என் கண்களில் வழிந்த முதல் துளியுமே அறியும் நீ இந்த பிரபஞ்சமே போற்றும் பேரழகி என்று........... 3).வார்த்தைகளைத் தேடி பெண்ணே! உனக்கு ...